Tuesday, January 7, 2020

Uyirinum Uyarndha Lyrics

Ayngaran - Uyirinum Uyarndha Bass Boosted Audio Song - Hariharan Lyrics

Uyirinum Uyarndha Lyrics
Singer Hariharan
Music G. V. Prakash Kumar
Song Writer Madhan Karky
உயிரினும் உயர்ந்தது பணம் எனும் போது
உலகினில் உலகினில் ஒளி கிடையாது
மனிதனை மனிதனும் விழுங்கிடும் போது
கனவுகள் உயிர் பெற வழி கிடையாது

கீழே மிகக் கீழே
நம்பிக்கை புதையுதடா
மேலே அதன் மேலே
எல்லாமே சிதையுதடா

பிறருக்கு வரந்தரா அறிவென்ன அறிவு
இருளினை நிறுத்திடு ஐங்கரனே!
கருங்கருங்குழியினில் சுருங்குது மனிதம்
ஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே!


ஏன் இது ஏன்?
எமை நாமே அழிப்பது ஏன்?
ஏன் அது ஏன்?
பிறகுன்னை பழிப்பது ஏன்?

பொய்களின் புன்னிய வேடத்தை எல்லாம்
பொசுக்கிட வா வா ஐங்கரனே!
நன்மையை மிதித்திடும் நரிகளை எல்லாம்
நசுக்கிட வா வா ஐங்கரனே!


தீ ஒரு தீ
இதயத்தில் முளைக்குதடா
ஊர் முழுதும்
ஒரு சேர்ந்தே அணைக்குதடா

முடிந்திடும் முடிந்திடும் முடிந்திடும் என்றே
உறுதியை கொடுத்திடு ஐங்கரனே!
விடிந்திடும் விடிந்திடும் விடிந்திடும் என்றே
இரவினை முடித்திடு ஐங்கரனே!


Tags: Ayngaran Songs Lyrics ஐங்கரன் பாடல் வரிகள் Uyirinum Uyarndha Songs Lyrics உயிரினும் உயர்ந்த பாடல் வரிகள்


0 Comments:

Popular Posts

loading...