Tuesday, January 7, 2020

Naan Pizhaippeno Lyrics

Naan Pizhaippeno - Lyric Video | Enai Noki Paayum Thota | Darbuka Siva | Thamarai | Gautham Menon - Sathyaprakash Lyrics

Naan Pizhaippeno Lyrics

Singer Sathyaprakash
Music Darbuka Siva
Song Writer Thamarai
மாமு பொழுது போகல
படம் பிடிக்கல
கண்ணில் பசுமை காணல
காற்று கூட அடிக்கல

ஒரு தாமரை நீரினில் இல்லாமல்
இங்கே ஏன் இரு மேகலை பாதங்கள்
மண் மீது புண்ணாவதேன்

ஓர் ஓவியம் காகிதம்
கொள்ளாமல் இங்கே ஏன்
அதன் ஆயிரம் ஆயிரம்
வண்ணங்கள் பெண்ணாவது ஏன்

நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
நாடகம் போலே நாட்கள் போகுதே

ஆயிரம் பூக்கள் தூவ தோணுதே
தோன்றிடும்போதே பாவம் தீருதே
காரிகை யாலே காற்றும் மாறுதே
வானிலை வெப்பம் தோற்றுப் போகுதே

காலை விழிப்பு வந்ததும்
கண்ணில் அவள் முகம்
என்னை புதிய ஒருவனை செய்யும்
செய்யும் அறிமுகம்

இதுநாள் வரை நாள் வரை இல்லாத
பூந்தோட்டம் திடு திப்பேனே திப்பேனே
எங்கெங்கும் ஏன் வந்தது


உன்னை பார்ப்பது நிச்சயம்
என்றான அன்றாடம்
என்னை சில்லிட வைத்திடும்
பூகம்பம் தான் தந்தது

நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
நாடகம் போலே நாட்கள் போகுதே

ஏன் உன்னை பார்த்தால் பூர்வ ஞாபகம்
ஏழெட்டு நுாலாய் வந்து போகணும்
வீட்டுக்கு போனால் அங்கும் உன்முகம்
வீம்புடன் வந்தே வீழ்த்தி பார்க்கணும்

வெண்ணிலா தூரத்து பார்வைகள் போகாதே
அதை என்னிடம் வா என்று சொன்னாலும் வராதே

நான்கைந்து வார்த்தைகள்
நான் சேர்க்கிறேன் வைரக்கல்
போல ஒவ்வொன்றும்
நான் கோர்க்கிறேன்

ஏதேனும் பேசாமல்
தீராதினி
உறையும் பனி


Tags: Enai Noki Paayum Thota Songs Lyrics எனை நோக்கி பாயும் தோட்டா பாடல் வரிகள் Naan Pizhaippeno Songs Lyrics நான் பிழைப்பேனோ பாடல் வரிகள்


0 Comments:

Popular Posts

loading...