Tuesday, January 7, 2020

Oliyum Oliyum Lyrics

Comali - Oliyum Oliyum Lyric (Tamil) | Jayam Ravi, Kajal Aggarwal | Hiphop Tamizha - Sathya Narayan, Ajay Krishnaa Lyrics

Oliyum Oliyum Lyrics
Singer Sathya Narayan, Ajay Krishnaa
Music Hiphop Tamizha
Song Writer Kabilan
ஒரு ஒளியும் ஒலியும் பாக்க
அன்னைக்கு ஊரு கூடுச்சே
இப்போ சேனல மாத்தி மாத்தியே
நம்ம உறவு அந்துடுச்சே

சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருசே

டகுடகு டகுடகு டகுடகு டகுடகு
டகுடகு டகுடகு டகடம் டா
டகுடகு டகுடகு டகுடகு டகுடகு
டகுடகு டகுடகு டகடம் டா

ஜவ்வு மிட்டாய் வாட்ச் கட்டி
காலம் போச்சு அன்னைக்கு
பிபி சுகர வாட்ச்சில் பார்த்து
வாழ்க்க போச்சு இன்னைக்கு

எம்மதமும் சம்மதம்ன்னு
சொல்லி தந்தியே
சம்மதத்த பாதியிலே மாத்திகிட்டயே

கோயிலுக்குள் ஆண்டவன பாத்த ஆளத்தான்
உன் கலகத்துக்கு அடியாள கோர்த்துவிட்டியே

தகுதி இல்லா தருதலைக்கும்
திமிரு இருக்குது
தமிழ் நாட்டுல பொழைக்கனும்னா
ஒடம்பு வலிக்குது

நாடார் கடை நாயர் கடை
எல்லா இடத்திலும்
நாகலாந்தும் மிசோரமும்
வேல செய்யுதே

நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி

நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி

ஒரு ஒளியும் ஒலியும் பாக்க
அன்னைக்கு ஊரு கூடுச்சே
இப்போ சேனல மாத்தி மாத்தியே
நம்ம உறவு அந்துடுச்சே

சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருசே


மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்க மரத்துல ஏறிச்சாம்
கட்ட எறும்பு கடிச்சுச்சாம்
காலு காலுன்னு கத்துசாம்

ஒஹ் அன்னைக்கு 90’ஸ் கிட்டு
சிடியில் பார்த்த
கசமுசா கசமுசாடா 2கே கிட்டு
டிக்டாக் பார்த்து சிக் ஆகி
கெடக்குது பார்

ரோடுதான் போடட்டும்
ஓஓஹோ
நாடுதான் மாறட்டும்
ஆஹா
விவசாயம் பண்ணிதான்
விவசாயி வாழட்டும் அது

ஆங்கிலம் படிக்கட்டும்
யஹ் யஹ்
ஹிந்தியும் பேசட்டும்
க்யா கியா
தாய் மொழி தமிழ் மட்டும்
தலைமை தாங்கட்டும்
தமிழன்டா

தீயாம வேகுற
ஆயாவின் தோசையா
பூமியே ஆகட்டும்
எல்லாரும் நல்லா இருக்கட்டும்

டங் டங் யாரது பேயது
என்ன வேணும் கலர் வேணும்
என்ன கலர் பச்சை கலர்
என்ன பச்சை மா பச்சை
என்ன மா சினிமா
டங் டங் டங் என்னமா
உங்கம்மா ஹேய்

ஒரு ஒளியும் ஒலியும் பாக்க
அன்னைக்கு ஊரு கூடுச்சே கூடுச்சே
இப்போ சேனல மாத்தி மாத்தியே
நம்ம உறவு அந்துடுச்சே அந்துடுச்சே

சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருசே சேர்ந்துருசே

இருபது வருசத்துல
இத்தனை நடந்துருச்சே
தூங்கினோம் முழிச்சு பாத்தா
உலகமே மாறிடுச்சே

நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி

நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி


Tags: Comali Songs Lyrics கோமாளி பாடல் வரிகள் Oliyum Oliyum Songs Lyrics ஒரு ஒளியும் ஒலியும் பாக்க பாடல் வரிகள்


0 Comments:

Popular Posts

loading...