Tuesday, January 7, 2020

Vizhuvathum Ezhuvathum Lyrics

Pon Manickavel - Vizhuvathum Ezhuvathum Lyric | Prabhu Deva | D. Imman - D. Imman Lyrics

Vizhuvathum Ezhuvathum Lyrics
Singer D. Imman
Music D. Imman
Song Writer Viveka
விழுவதும் எழுவதும்
தானடா வாழ்கையே
எழும்வரை இதயத்தில்
வேண்டுமே வேட்கையே

வழித்துணையாய் இவள் நேசம்தான்
போதும் போதுமே
விழிகளின் ஓரத்து ஈரங்கள்
காய்ந்து போகுமே

உறங்கிட ஒரு மடி இருக்கிறது
என்றுமே
உனக்கென அனுதினம் துடிக்கிறது
நெஞ்சமே

கூடையில் கூடையில்
தூவிடும் மேகம் போல
கூடவே கூடவே
தேவதை நிழல் வரும்

ராத்திரி பாதையில்
வீசிடும் வெளிச்சம் போல
காதலன் காவலன்
ஆறுதல் வழி தரும்


விழுவதும் எழுவதும்
தானடா வாழ்கையே
எழும்வரை இதயத்தில்
வேண்டுமே வேட்கையே

எரிமலை தெறிப்பென சீறிவா
சாம்பல் ஆக்கலாம்
எதிரியின் படைகளை தீரமாய் மோதி
சாய்க்கலாம்

சரித்திரம் முழுவதும்
ஜெயித்தவர்கள் யாரடா
தடைகளை துரும்பென
மதித்தவர்கள் தானடா

சூறையாய் மோதியே
போரிலே வாகை சூடு
ஏளனம் செய்தவர்
பார்த்திட பதில் கொடு

கைகளே ஆயுதம்
காலத்தை சொந்தம் ஆக்கு
நானிலம் தாண்டியும்
அஞ்சிட நடந்திடு

விழுவதும் எழுவதும்
தானடா வாழ்கையே
எழும்வரை இதயத்தில்
வேண்டுமே வேட்கையே


Tags: Pon Manickavel Songs Lyrics பொன்மாணிக்க வேல் பாடல் வரிகள் Vizhuvathum Ezhuvathum Songs Lyrics விழுவதும் எழுவதும் பாடல் வரிகள்


0 Comments:

Popular Posts

loading...